காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை
x

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை நடத்தினர்.

நீலகிரி

கூடலூர்,

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேரம்பாடி மற்றும் பாட்டவயல் பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக கூடலூரை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டனர்.

பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார். இதேபோல் சேரம்பாடியில் தொடங்கி பந்தலூர் வழியாக வந்த பாதயாத்திரையை நிர்வாகி குஞ்சாபி தொடங்கி வைத்தார். நேற்று மாலை 4 மணிக்கு கூடலூர் காந்தி திடலை காங்கிரஸ் கட்சியினர் வந்தடைந்தனர். நிறைவு நிகழ்ச்சிக்கு கே.பி.முகமது மற்றும் நகர தலைவர் சபி ஆகியோர் தலைமை தாங்கினர். கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான கட்சியினர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பந்தலூர் அருகே உப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினரின் பாத யாத்திரை நடைபெற்றது. இதற்கு நெல்லியாளம் நகர தலைவர் சாஜி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story