காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
சோளிங்கரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகரத் தலைவர் கோபால் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட செயலாளர் கல்பனா, முன்னாள் எம்.எல்.ஏ. அசேன், ஒன்றிய தலைவர்கள் கார்த்தி, உதயகுமார், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோளிங்கர் இளைஞர் அணி அமைப்பாளர் பட்டறை மணி, வழக்கறிஞர்கள் ரகுராம்ராஜூ, பாலகிருஷ்ணன் செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு காந்தி சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து சோளிங்கர் பஸ் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை பாதயாத்திரை சென்றனர்.
வழி நெடுகிலும் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் படும் பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.