காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

கட்சி அலுவலகம் திறப்பு

பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்காக கடந்த 1949-ம் ஆண்டு காமராஜர் பெயரில் கிரையம் பெறப்பட்டு, ஆக்கிரமிப்பில் இருந்த இடம் தற்போது மீட்டு புதுபிக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி, புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி பாதயாத்திரை நடக்கிறது. இது வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும் நடைபெறுகிறது. பா.ஜனதாவினர் சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் வருத்தம் இல்லை. மகிழ்ச்சி தான். ஏன் இத்தனை ஆண்டு காலம் சுதந்திர தினத்தை கொண்டாடவில்லை என்று அவர்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பொருளாதாரத்தால் நாடு வளர்ச்சி அடைந்து உள்ளது. களப்பணியை திறம்பட செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதயாத்திரை

இதை தொடர்ந்து 75-வது சுதந்திர தினத்தையொட்டி பாதயாத்திரை நடைபெற்றது. இதற்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, நகர தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பாதயாத்திரையை தொடங்கி வைத்து நடந்து சென்றார். பாதயாத்திரை வெங்கட்ரமணன் வீதியில் தொடங்கி, பஸ் நிலையம் வழியாக சென்று கோவை ரோட்டில் மகாலிங்கபுரம் ஆர்ச்சில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர்கள் அழகு ஜெயபாலன், மாநில செயலாளர் சித்திக், முன்னாள் மாவட்ட தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் சிற்பி ஜெகதீசன், விசு, பத்ரகிரி, மோகன்ராஜ் காமராஜ், பாண்டியன், கவிதா, வக்கீல் ரவி, தினேஷ், கோவிந்தராஜ், தமிழ்செல்வன், சாந்தலிங்கம், இஸ்மாயில், சிவராஜ், ஜவகர், தங்கவேல், பூபதி, அமீர், பேபி, பிரபாகரன், கண்ணன், பழனிசாமி, முருகநாதன், சுரேஷ், கோபால், மகேஷ், ராமராஜ், அன்சர், மூர்த்தி, சிவசாமி, பிரிட்டோ, காளிமுத்து, உதயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெசவு தொழில் நலிவு

ஒன்றுப்பட்ட கோவை மாவட்டத்தில் நெசவு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பஞ்சு கிடைக்காத காரணத்தால் நூல் விலை உயர்ந்தது. அதன்பிறகு அதிக விலை கொடுத்து நூலை உற்பத்தி செய்த பிறகு, நூல் விலை வீழ்ந்து விட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவில் நெசவு பொருளாதாரம் வீழ்ந்து விட்டது. கோவை மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் நெசவு தொழில் நலிவடைந்து விட்டது. விவசாயத்திற்கு அடுத்து வருமானம் தரக்கூடியது ஜவுளி தொழிலாகும். நாட்டின் ஒவ்வொரு முதுகெலும்பான விஷயத்தில் தவறு செய்து வருகின்றனர். அதன் விளைவு இந்திய பொருளாதாரம் பாழ்படுகிறது. கவர்னரும், நடிகர் ரஜினிகாந்தும் வெளியில் சொல்ல முடியாததை ஏன் பேசினார்கள் என்பது முதல் கேள்வி. தெளிவானவர்கள் பேசும்போது அது மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயமாக இருக்க வேண்டும். மின்சார திருத்த சட்டமசோதா மிகவும் தவறான ஒன்று. எனவே மின்சார திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story