நேரு சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை


நேரு சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை
x

நேரு சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி வில்லியம்ஸ்சாலையில் சேவாசங்கம் பள்ளி எதிரே உள்ள நேரு உருவச்சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், கவுன்சிலர் ரெக்ஸ் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Next Story