காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா
காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா 7 இடங்களில் நடந்தது.
இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்ற நடைபயண வெற்றி விழாவையொட்டி மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் சிவகங்கை நகர், தொண்டி ரோடு, போஸ் சிலை, இந்திரா நகர், காலேஜ் ரோடு, காளவாசல் திருப்பத்தூர் ரோடு, அரண்மனை வாசலில் உள்ள காமராஜர் சிலை ஆகிய 7 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் ஆகியோர் கட்சி கொடி ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், நகர் காங்கிரஸ் தலைவர் குரு கணேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் தா.கணேசன், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஏலம்மாள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது இக்பால், பார்வதி பாலு, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ராஜேந்திரன், தேவகோட்டை நகர் காங்கிரஸ் தலைவர் லோகநாதன், நகர் துணை தலைவர் துரை பிரபு, ஐ.என்.டி.யூ.சி. வீர காளை, முருகேசன், நிர்வாகிகள் விக்னேஸ்வரன், ராம்குமார், சங்கையா, இருதயராஜ், இந்திரஜித் செபஸ்தியான், பழனி, மகேஸ்வரி கண்ணன், ராஜ்மோகன், பிரபாகரன், வெங்கடாசலம், ராஜாராம், பாண்டி, ஆரோக்கியராஜ், சுப்ரமணியன், சம்பத்குமார், சமய துரை, முருகேசன், கார்த்தி, ஒய்.பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.