மத்திய மந்திரி எல்.முருகனுடன் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு


மத்திய மந்திரி எல்.முருகனுடன் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு
x

மத்திய மந்திரி எல்.முருகனை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் சந்தித்து பேசினார்.

நெல்லை,

மத்திய இணை மந்திரி எல்.முருகனை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் திடீரென சந்தித்து பேசினார். கட்சி நிகழ்ச்சிக்காக நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்ல இருந்த எல்.முருகனை ராபர்ட் புரூஸ் எம்.பி., மத்திய மந்திரியின் அறைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின்போது ராபர்ட் புரூஸை சாப்பிடுமாறு எல்.முருகன் அழைப்பு விடுத்தார்; இதற்கு சாப்பிட்டு வந்ததாக அவர் கூறினார். இந்த சந்திப்பானது சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மந்திரியை காங்கிரஸ் எம்.பி., திடீரென சந்தித்ததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் நமது ஊருக்கு வந்த மத்திய மந்திரியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக காங்கிரஸ் எம்.பி. கூறினார்.


Next Story