சட்டப்பேரவையில் கவர்னர் உரையை புறக்கணிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக
கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்குகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் கவர்னர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகள் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளது. கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story