காங்கிரசார் ரெயில் மறியல் முயற்சி; 26 பேர் கைது


காங்கிரசார் ரெயில் மறியல் முயற்சி; 26 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் காங்கிரசார் ரெயில் மறியலுக்கு முயன்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

அதுபோல் கோவில்பட்டி காங்கிரசார் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமையில் ெரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக நேற்று மாலை 4 மணி அளவில் ெரயில் நிலையத்திற்கு ஊர்மூலமாக வந்தனர்.

ெரயில் நிலைய நுழைவு வாயிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ெரயில் நிலைய நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து காங்கிரசார் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உடனடியாக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவின் பேரில் போலீசார், பொன்னுச்சாமி பாண்டியன், நகர தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மகேஷ்குமார், திருப்பதி ராஜா, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், துணை தலைவர் முத்து, செயலாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர் சண்முகவேல், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் ஜோசுவா, மகளிர் காங்கிரஸ் நகர தலைவி நல்ல மதி உள்பட 26 பேரை கைது செய்தனர்.



Next Story