ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடிதம் அனுப்பும் போராட்டம்- ஈரோடு கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடிதம் அனுப்பும் போராட்டம்- ஈரோடு கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம்
x

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈரோடு கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு

கடிதம் அனுப்பும் போராட்டம்

இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட முதலாம் மண்டலம் சார்பில் ஈரோடு தபால் அலுவலகத்தில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மண்டல தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், கவுன்சிலர் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் விஜய் கண்ணா, கே.என்.பாஷா, முகமது அர்சத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் வக்கீல் பிரிவு சார்பில் ஈரோடு சம்பத்நகர் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஈ.ஆர்.எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், வக்கீல் ஓ.எம்.ஆர்.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சி.எம்.ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வக்கீல்கள் சித்ரா, நித்யா, ராஜீவ்காந்தி, சேது, விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story