விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலை நிகழ்ச்சிகள், கலைத்திறன், விளையாட்டுப் போட்டிகள், அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றில் திறம்பட செயல்பட்ட மாணவ-மாணவிகள் நிர்வாகம் சார்பில் பாராட்டப்பட்டனர். கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்ற சரயுகுமார், வெள்ளிப்பதக்கம் பெற்ற ரெதிஷ் பால்ராஜ், கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ஜாஸ்மின் பர்கான், அப்ரோஸ் ரிஸ்வான், அஸ்வின் செல்வகுமார் பிரஜின், மாணிக் ஹரிஷ், கலைத்திறன் மற்றும் அறிவியல் சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சோம்பு பரத்வாஜ், வன்னியராஜ், கீழப்புலியூர் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோரை பள்ளி சேர்மன் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., இயக்குனர் இசக்கி துரை, பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா, அலுவலக இயக்குனர் ராம்குமார், ஆசிரியர்கள் உஷா, ஜெனிபர், கட்ரில்லா, ரீட்டா, சாரா, ராமலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் பாலா ஆகியோர் பாராட்டினர்.