கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
x

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கேரளா வி.கே.என். உள்விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாகவும் பஞ்சபூதா சர்வதேச தற்காப்பு கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்து கொண்டு 10 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களை இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பயிற்சி அளித்த மாஸ்டர் சதீஷ்குமார், ராஜ்குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Next Story