குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
குத்துச்சண்டை போட்டியில் வென்ற கீழக்கரை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு ெதரிவிக்கப்பட்டது.
கீழக்கரை,
ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளில் 180 மாணவர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவிலான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரியர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர் பாராட்டினர்.