ஆற்காடு வேத நிகேதன் மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஆற்காடு வேதநிகேதன் மெட்ரிக்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதையொட்டி சாதனை மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
ராணிப்பேட்டை
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஆற்காடு வேதநிகேதன் மெட்ரிக்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதையொட்டி சாதனை மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஆற்காடு வேத நிகேதன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பிளஸ் -2 பொதுத் தேர்வில் பள்ளி அளவில் மாணவன் வி.சுகுந்தன் 600 க்கு 580 மதிப்பெண்கள், மாணவன் எஸ்.அரவிந்த் 562 மதிப்பெண்கள், மாணவி எஸ்.ஹேமலதா 557 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர். அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாணவன் வி.தட்சணாமூர்த்தி 500-க்கு 479 மதிப்பெண்கள், யூ.ஷாலினி 478 மதிப்பெண்கள்,மாணவன் பி.கார்த்திக் ராஜ் 463 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர்.
இதனையொட்டி எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாணவ- மாணவிகளுக்கும், வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.நிறைமதி அழகன், பள்ளி இயக்குனர் டாக்டர் எம்.விஜயராணி ஆகியோர் தலைமை தாங்கி, பள்ளி அளவில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாணவ- மாணவிகள், ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினர்.