சுகாதார அலுவலர்கள் கலெக்டரிடம் வாழ்த்து


சுகாதார அலுவலர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
x

சிறப்பாக பணியாற்றியதற்காக விருது பெற்ற சுகாதார அலுவலர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.

நாமக்கல்

விருதுகள்

தமிழக மக்கள் நல்வாழ்வுமற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுகாதார மாநாடு-2022 நடந்தது. அதில் 2030-ம் ஆண்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் பொருட்டு 17 குறியீடுகளின் அடிப்படையில் சிறந்த முறையில் செயல்படும் மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதில் சிறப்பான முறையில் பணியாற்றியதில் மொத்தம் உள்ள 424 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 5-ம் இடத்தையும், 1,383 கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாமக்கல் மாவட்டம், பவித்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 15-ம் இடத்தையும் பெற்றது. அதேபோல் பிலிக்கல்பாளையம், குமாரபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிறந்த முறையில் செயல்பட்டதற்காக விருதுகள் வழங்கப்பட்டன‌.

வாழ்த்து

அந்த விருதுகளை சுகாதாரத்துறை அலுவலர்கள், கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் பிரபாகரன் உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story