இடப்பிரச்சினையில் இருதரப்பினர் இடையே மோதல்
இடப்பிரச்சினையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
விராலிமலை தாலுகா, கோட்டைக்காரன்பட்டியை சேர்ந்தவர் செபஸ்டியான் (வயது 70). இவருக்கும் இவரது வீட்டின் அருகே குடியிருக்கும் உறவினர் ஜெயசீலன் என்பவருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக இடப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சம்பவத்தன்று செபஸ்டியானுக்கும், ஜெயசீலன் மகன் அலெக்சாண்டர் (24) என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அலெக்சாண்டருக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர்கள் மோசஸ் மகன் ரூபன் (19), குணசேகரன் மகன் மேத்யூ, ஜோசப் மகன் டேவிட், செபஸ்தியான் மகன் தனசேகரன் ஆகியோரும் செபஸ்டியானுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த எட்வர்ட் மகன் நிர்மல் நிசாந்த் (23) ஆகிய இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 2 தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.