2 தரப்பினர் இடையே மோதல்; ஆசிரியை உள்பட 4 பேர் மீது வழக்கு
2 தரப்பினர் இடையே மோதல்; ஆசிரியை உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி சீனிவாசா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (56), இவரது மனைவி மலர்விழி. இவர் கவண்டம்பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 52) என்பவருக்கும் இடையே பாதை பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சரஸ்வதியை செந்தில்குமார், மலர்விழி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கி உள்ளனர். இதில் சரஸ்வதி காயம் அடைந்தார். இதேபோல், சரஸ்வதி, அவரது மகன் ஆகாஷ் (20) ஆகியோர் அரிவாளால் தாக்கியதில் செந்தில்குமாருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து 2 தரப்பினரும் தனித்தனியாக மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் 2 தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.