புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வரும் கலீம் (வயது 63) என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மாலிக் நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சம்சுதீன் என்ற ரசாக் (40) கடையில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்சுதீனை கைது செய்தனர்.


Next Story