வீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்
x

நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் வீட்டில் பதுக்கிய 830 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.

நாமக்கல்

830 கிலோ ரேஷன்அரிசி

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண் தமிழக அரசால் வழங்கப்படும் பொது வினியோகதிட்ட ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையின் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுரைபடி ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வளையப்பட்டி பகுதியில் ரோந்து சென்று கொண்டு இருந்தனர்.

உரிமையாளர் கைது

அப்போது வளையப்பட்டி பெருமாள் கோவில் மேற்கு தெருவில் கருப்பண்ணபிள்ளை என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன்அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன்அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கருப்பண்ண பிள்ளையை (வயது66) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பதுக்கல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story