கிருஷ்ணகிரியில் இருந்துகர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்2 பேர் கைது


கிருஷ்ணகிரியில் இருந்துகர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்2 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் இளங்கோ தலைமையில், பறக்கும்படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, 5-வது வார்டுக்குட்பட்ட முனுசாமி தெரு, குடிநீர் தொட்டி அருகில் 19 மூட்டைகளில், 950 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று இருந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கி வைத்து தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

அதேபோல கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகில், 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அப்போது அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர். அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிபட்டி ராஜா (வயது 40), வெங்கடேசன் (27) என்பதும், கிருஷ்ணகிரியில் வீடு, வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்திற்கு கடத்தி சென்று விற்க முயன்றதும் தெரிந்தது.

இதையடுத்து அந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 இடங்களில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டர், 2 பேரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Next Story