மயிலத்தில் மூதாட்டியிடம் 10 கிலோ கஞ்சா பறிமுதல்


மயிலத்தில்  மூதாட்டியிடம் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலத்தில் மூதாட்டியிடம் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம்


மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் கூட்டேரிப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்குள்ள மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த மூாதாட்டி ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திருநெல்வேலியை சேர்ந்த விஜயா(60) என்பதும், தற்போது அவர் விழுப்புரம் முக்தி அருகே உள்ள மணிநகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது அதில் ஒருகிலோ கஞ்சா இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மேற்கொண்டு அவரிடம் விசாரித்தனர். அதில் பல வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக விஜயா போலீசில் தெரிவித்தார்.

இதையடுத்து மணிநகரில் அவர் வசித்து வரும் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அங்கு, 9 கிலோ கஞ்சாவை பதிக்கி வைத்திருந்தார். அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயாவை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

இதற்கிடையே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா நேரில் வந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்டார். மேலும் போலீசாரையும் அவர் பாராட்டினார்.


Next Story