மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
x

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கொள்ளிடம் ஆற்றப்படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் அர்ஜுனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபுரந்தான் அரசு தொடக்கப்பள்ளி அருகே மாட்டு வண்டியை ஓட்டி சென்றவர் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் அந்த மாட்டு வண்டியை போலீசார் சோதனை செய்தபோது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story