தடை செய்யப்பட்ட 40 கிலோ கெளுத்தி மீன்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட 40 கிலோ கெளுத்தி மீன்கள் பறிமுதல்
x

ஓசூரில் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட 40 கிலோ கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்து நகர்நல அலுவலர் அஜிதா நடவடிக்கை எடுத்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட 40 கிலோ கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்து நகர்நல அலுவலர் அஜிதா நடவடிக்கை எடுத்தார்.

மார்க்கெட்டில் ஆய்வு

ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன் உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர் அஜிதா தலைமையில் ஓசூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தபடுகிறதா? என கண்காணிக்கும் பணி தொடங்கியது. முன்னதாக ஓசூர் பழைய மாநகராட்சி அருகேயுள்ள மீன் மார்க்கெட்டில் நகர் நல அலுவலர் அஜிதா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன்கள் அங்கு விற்பனை செய்வது தெரியவந்தது. சுமார் 40 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மீன் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை அழித்து, உரம் தயாரிக்கும் கிடங்குக்கு அனுப்பி வைத்தார்.

அபராதம்

தொடர்ந்து ஓசூர் பஸ் நிலையம் மற்றும் பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சுமார் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதனை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது துப்புரவு ஆய்வாளர்கள் கிரி, ரமேஷ், மணி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story