தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 9 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, போக்சோ நீதிபதி .சரத்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 1. .அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண்.11 .செல்வம், மற்றும் வக்கீல் ராம்பிரபாகர் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

1,952 வழக்குகளுக்கு தீர்வு

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 65 குற்றவியல் வழக்குகளும் 131 காசோலை மோசடி வழக்குகளும் 88 வங்கிக்கடன் வழக்குகளும், 73 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும் 49 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 136 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 2 ஆயிரம் மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2542 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,878 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.3 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 433 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 500 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 74 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.81 லட்சத்து ஆயிரத்து 600 வரை வங்கிகளுக்கு வரவானது. இதன்மூலம் 1,952 வழக்குகளுக்கு சமரச தீர்வு ஏற்பட்டது.


Next Story