துளிர் வினாடி-வினா போட்டி


துளிர் வினாடி-வினா போட்டி
x

பரமக்குடியில் ஒன்றிய அளவிலான துளிர் வினாடி-வினா போட்டி நடந்தது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான துளிர் வினாடி வினா போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு கீழ முஸ்லிம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். அறிவியல் இயக்க பொறுப்பாளர் காந்தி முன்னிலை வகித்தார். இதில் 6 முதல் 12 வகுப்பு வரை 3 நிலைகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற 27 மாணவ - மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர். போட்டியின் நடுவர்களாக ஆசிரியைகள் குணப்பிரியா, இந்துமதி, பானுமதி ஆசிரியர்கள் ஜான்தால், சேசுரத்தினம், ஜோசப் வில்லியம் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் நவம்பர் மாதம் ராமநாதபுரத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.


Next Story