மாவட்ட அளவிலான யோகாசன போட்டி


மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
x

மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடந்தது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு சங்கம் சார்பில் 2-வது மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் மற்றும் 35-வது மாநில போட்டிகளுக்கான ராமநாதபுரம் மாவட்ட அணி தேர்வு ஆகியவை ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை தேவிபட்டினம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி முதல்வர் தீனதயாளன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு சங்க துணைத்தலைவர் நம்பூதியான் தலைமை தாங்கினார். விளையாட்டு சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் விளக்கவுரையாற்றினார். மாவட்ட விளையாட்டு சங்க பொறுப்பாளர் புவனேஸ்வரி, மாவட்ட விளையாட்டு சங்க துணை செயலாளர் மலைச்சாமி ஆகியோர் வரவேற்றனர். இந்த போட்டிகள் 8 வயது முதல் 10 வயது வரையும், 18 வயது முதல் 20 வயது வரையும் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் 10 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் மாணவர்கள் இந்த மாதம் திண்டுக்கல்லில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.


Next Story