ரூ.2 கோடியே 27 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்சாலை பணி நிறைவு


ரூ.2 கோடியே 27 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்சாலை பணி நிறைவு
x

ரூ.2 கோடியே 27 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்சாலை பணி நிறைவு

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியா கிரக நினைவு ஸ்தூபி உள்ளது. இங்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.2 கோடியே 27 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி 30 நாட்களில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த சாலையை நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, துணைத்தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமதுஇப்ராகிம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story