ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக புகார் : கூட்டுறவுத்துறை எச்சரிக்கை
ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 246 கிடங்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது.
இதன்மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த நிலையில் ரேசன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போலி பில் போடும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story