புகார்பெட்டி


புகார்பெட்டி
x

புகார்பெட்டி

கோயம்புத்தூர்

சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

கோவை-சத்தியமலங்கலம் சாலையில் அம்மன் நகர் முதல் புரோசன் மால் வரை சாலை விரிவாக்கப்பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். மேலும அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன்ராஜ், சரவணம்பட்டி.

குடிநீர் குழாயில் உடைப்பு

எட்டிமடை அருகே உள்ள பாலத்துறையில் 9-வது வார்டில் சர்ச் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆல்வின், பாலத்துறை.

குண்டும், குழியுமான சாலை

கோவை ஆவாரம்பாளையத்தில் இருந்து பீளமேடு செல்லும் சாலையான எம்.ஜி.ரோடு மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்த், ஆவாரம்பாளையம்.

அபாய குழி

கணபதி இருந்து வரும்போது, டெக்ஸ்டூல் பாலத்தில் ஏறும் இடத்தில் குழி ஏற்பட்டு, சிமெண்ட் பூச்சி பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இருசக்கர வாகனங்களின் டயர்கள் பஞ்சராக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த அபாய குழி இருப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த அபாய குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், சங்கனூர்.

புகைமூட்டதால் மூச்சு திணறல்

சிவானந்தா காலனி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இரவு நேரங்களில் சிலர் குப்பைகளை போட்டு தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த புகைமூட்டம் ஏற்படுவதுடன், அந்த பகுதியில் உள்ள வயதானவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்கிறது. எனவே மேம்பாலத்தின் கீழ் குப்பைகளை போட்டு தீ வைப்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகமும், போலீசாரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்லப்பாண்டி, சிவானந்தா காலனி.

சாலையோரம் வழிந்தோடும் கழிவுநீர்

கோவை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையோரம் வழிந்தோடி செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இது சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேணடும்.

வேல்முருகன், வெள்ளக்கிணறு.

குவிந்து கிடக்கும் குப்பைகள் (படம்)

கோவை நியூசித்தாபுதூர் புதியவர்நகரில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் காற்றில் பறந்து வந்து சாலையில் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சித்தாபுதூர்.

துர்நாற்றம்

கணபதி கணேஷ் லேஅவுட் பகுதியில் இருந்து ராஜீவ்காந்தி ரோட்டிற்கு செல்லும் வழியில் பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் அடியில் சாக்கடை கால்வாய் உள்ளது. தற்போது அந்த பாலத்தின் இருபுறமும், சாக்கடை கால்வாயிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனபேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி, சாக்கடையை தூர்வார வேண்டும்.

முத்து, கணபதி.

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா? (படம்)

கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி ரெயில்வே கேட் பகுதியில் இருந்து சூலக்கல் செல்லும் வழியில் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டுகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், சூலக்கல்


Next Story