புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

பள்ளமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பரமக்குடி ரோட்டில் பழைய மீன் மார்க்கெட் எதிரில் 5 ரோடு பிரியும் இடத்தில் பள்ளம் உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்குகின்றனர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காதர்மீரா,ஆர்.எஸ்.மங்கலம்.

நடவடிக்கை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வகுப்பறைகளின் தேவை அதிகரிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவராஜ், திருப்புல்லாணி.

கூடுதல் குடிநீர் வினியோகிக்கப்படுமா?

ராமநாதபுரம் நகர் சிவன் கோவில் அருகில் உள்ள முதலை ஊருணி கீழ்கரை பகுதியில் உள்ள ஆழ்துளை அடிபம்பு செயல்படாமல் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் காவிரி குடிநீர் கூடுதலாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், ராமநாதபுரம்.

வீணாகும் குடிநீர்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அழகன்குளத்தில் பெரிய ஜூம்மா பள்ளி வாசல் எதிரில் உள்ள ஒரு குடிநீர் குழாயில் பைப் உடைந்து குடிநீர் விணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரூக்உசேன், அழகன்குளம்.

விபத்து அபாயம்

ராமநாதபுரம் நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள சாலை மதுரை செல்லும் பிரதான சாலை சந்திக்கும் இடத்தில் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பாக ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அங்கு போக்குவரத்தை சீர்செய்ய சிக்னல் லைட் பொறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.


Next Story