சமுதாய வளைகாப்பு விழா; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு


சமுதாய வளைகாப்பு விழா; சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
x

ராதாபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, 150 கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான சத்துணவு மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா, ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story