100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x

கலசபாக்கம் தாலுகாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகரன், கவுன்சிலர் கலையரசி துரை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் எழில்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா வரவேற்றார்

சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்கள்.

அப்போது அவர்கள் பேசுகையில், வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் நடக்கக் கூடியதாக இருந்த வளைகாப்பு நிகழ்ச்சி, தற்போது தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய குடும்பத்தில் உள்ளவர்களையும் ஒன்றிணைத்து செய்யப்படும் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் அனைவரும் நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும் என்றனர்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் விஜய், ஊராட்சி மன்ற தலைவர்கள் வித்யாபிரசன்னா, பத்மாவதி, பன்னீர்செல்வம் உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story