கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
x

பள்ளிபாளையத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம், சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீர் வழங்கும் விழா பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் 50 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வளைகாப்பு செய்து, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கு நகர் மன்ற தலைவர் செல்வம், துணைத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. நகர அவைத் தலைவர் குலோப்ஜான், நகர செயலாளர் குமார், நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story