100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x

சேலத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் நடத்தி வைத்தனர்.

சேலம்

சமுதாய வளைகாப்பு

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று தொங்கும் பூங்காவில் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

பல்வேறு சலுகைகள்

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, பெற்றோர் வீட்டில் எவ்வாறு வளைகாப்பு நடத்தப்படுமோ அதேபோன்று தற்போது கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல்வேறு சலுகைகளை அளித்து வருவதால் தற்போது பெண்கள் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அதன்படி பெண்கள் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும் என்றார்.

இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர், வருவாய் அலுவலர் மேனகா, துணை மேயர் சாரதாதேவி, உதவி கலெக்டர் சுவாதிஸ்ரீ, மண்டல குழு தலைவர் உமாராணி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story