கோவில்பட்டியில் தடையை மீறிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்: 47 பேர் கைது


கோவில்பட்டியில் தடையை மீறிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்: 47 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தடையை மீறி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

இளையரசனேந்தல் கிராமத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி நேற்று கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையில் குவிந்தனர்.

கோரிக்கை மனுவை கழுதையிடம் கொடுத்தவாறு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் பி.கரும்பன், நிர்வாக்குழு உறுப்பினர் ஜி.சேதுராமலிங்கம், நகர செயலாளர் அ.சரோஜா, இளையரச னேந்தல் கிளை செயலாளர் எம்.இன்னாசிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் பி.பரமராஜ், தாலுகா உதவி செயலாளர்கள் ஜி.ராமகிருஷ்ணன், எஸ்.சுரேஷ்குமார், நகர துணை செயலாளர் டி.முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அங்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி தலைமையிலான போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்ளிட்ட 47 கம்யூனிஸ்டு கட்சியினரை கைது செய்தனர்.


Next Story