இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆா்ப்பாட்டம்
மாநில துணை செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் கடைதெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, ஒன்றிய பொருளாளர் முருகானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்கட்சி நிர்வாகிகள் செங்குட்டுவன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதேபோல திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.