மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்தும், மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடத்திய அதானி மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் அனில்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் மேசியதாஸ், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட அமைப்பாளர் செல்வராணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அனைத்திந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத்தலைவர் சுந்தரம் நிறைவுரையாற்றினார். முடிவில் மாநகர பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

---


Next Story