இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுசெயலாளர் சுப்பையா, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். தாலுகா உதவி செயலாளர் சுந்தர் வரவேற்றார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா பொருளாளர் சுடலை, நகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டை பஸ்நிலையத்தில் குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும், மூடிக்கிடக்கும் சுகாதார வளாகங்களை திறக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story