கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் தற்கொலை


கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் தற்கொலை
x

சிவகிரியில் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 75). இவர் சிவகிரி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 6 வருட காலமாக ரத்த கொதிப்பு நோய் இருந்து வந்தது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைகள் பெற்று மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மனைவி மாரியம்மாள் கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த ராமசுப்பு, வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராமசுப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story