கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள்  கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விலைவாசி உயர்வு, வேலையின்மையை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் நிதானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் முகிலன், சங்கத்தமிழன், அறிவன், ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சேரலாதன், பிரின்ஸ்சோமு, தமிழேந்தி, தமிழ்மாறன், நகரமன்ற கவுன்சிலர்கள் வித்யாசங்கரி, மெரீனா, ஒன்றிய கவுன்சிலர்கள் மஞ்சுளா, ஜெயமாலினி, முற்போக்கு மாணவர் கழக அமைப்பாளர் அகத்தியன், கம்யூனிஸ்டு நிர்வாகிகள் ஏழுமலை, ராஜாகுரு, சிவராமன், நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி துணை செயலாளர் பெரியார் நன்றி கூறினார்.

திண்டிவனம்

திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் இமயன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் வக்கீல் பூபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடைக்குழு ராஜாராம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தனை வேந்தன், தமிழ் ஆதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எழிலரசன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு அறிவழகன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாக குழு இன்பஒளி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் எழில்மாறன், சந்திரசேகர், மாத்தமிழன், காமராஜ், அப்புன், நசீர் அகமது, ஓவியர் பாலு, சீனிவாசராவ், தமிழரசன், ஆனந்தராஜ், பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் 9 இடங்களில்

இதேபோல் கண்டமங்கலம், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், கூட்டேரிப்பட்டு, செஞ்சி, வளத்தி, திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை, மரக்காணம் ஆகிய இடங்களிலும் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story