புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்கம்
சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடைபெற்றது.
சுரண்டை:
சுந்தரபாண்டியபுரத்திலிருந்து சுரண்டை, பாவூர்சத்திரம் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடந்தது. தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் தலைமை தாங்கினார். சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி தலைவர் செல்வகுமார், பேரூராட்சி செயலாளரும், துணைத் தலைவருமான பண்டாரம், நெல்லை போக்குவரத்து கழகத் துணை மேலாளர் சுப்பிரமணியன், தென்காசி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பழனிநாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன், சாம்பவர் வடகரை நகர தி.மு.க. செயலாளர் முத்து, மாணவரணி ரமேஷ், காங்கிரஸ் நகர தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், மாடசாமி ஜோதிடர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.