காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு


காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2022 1:15 AM IST (Updated: 3 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் கோபால்சாமி, நகர தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது குஜிலியம்பாறையில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.





Next Story