தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்


தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 18 Oct 2023 3:00 AM IST (Updated: 18 Oct 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாளாகும்.

திண்டுக்கல்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து பதிவுபெற்ற தொழிற்சாலைகளின் உரிமத்தை 2024-ம் ஆண்டுக்கு, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் புதுப்பிக்க வேண்டும். அதன்படி வருகிற 31-ந்தேதிக்குள் https://dish.tn.gov.in எனும் இணையதளத்தில் மட்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்த உடனே புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றுக்கும் ஆன்லைனில் உரிம கட்டணத்தை செலுத்தி, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்காக படிவம்-2 உடன் (3 நகல்கள்) உரிய கட்டணம் செலுத்தி தகுந்த ஆவணங்களுடன் திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று கொள்ளலாம். அதேபோல் ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் உள்ள ஒப்பந்ததாரர்களும் ஆன்லைனில் கட்டணத்துடன் விண்ணப்பித்து, ஒப்பந்த உரிமத்தை உடனுக்குடன் புதுப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் பி.என். சங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story