மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கார் டிரைவர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கார் டிரைவர் சாவு
x

உவரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் கார் டிரைவர் இறந்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

மேல உவரியை சேர்ந்தவர் சுயம்பு கோனார் மகன் குமார் (வயது 34). சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். உவரி அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (40). இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து உவரிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி சென்றார். அவர்கள் ஆனைகுடி விலக்கு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் உவரியை சேர்ந்த ரீகன் (45), ரெனோ (48) ஆகியோர் செல்போனில் பேசியபடி சென்றனர். திடீர் என அவர்கள் மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்து வலதுபக்கம் திரும்பினர். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மூவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குமாருக்கு மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளனர்.


Next Story