போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் கல்லூரி மாணவர்கள்
வேலூரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து ஒழுங்குமுறை விழிப்புணர்வு குழு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் மாணவ-மாணவிகள் போக்குவரத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும், நெரிசலை தவிர்ப்பது, போக்குவரத்து போலீசசாருடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடித்த அவர்கள் நேற்று வேலூர் நகரில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து அவர்களுக்கு உதவியாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார். அப்போது இப்பணியில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story