பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பஸ் மேற்கூரையில் ஏறியும், கத்தியை ரோட்டில் உரசியும் கல்லூரி மாணவர்கள் ரகளை


பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பஸ் மேற்கூரையில் ஏறியும், கத்தியை ரோட்டில் உரசியும் கல்லூரி மாணவர்கள் ரகளை
x

பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பஸ் மேற்கூரையில் ஏறியும், படிக்கட்டில் தொங்கியபடி பட்டாக்கத்தியை ரோட்டில் உரசியும் ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை பிராட்வேயில் இருந்து காரனோடை, செங்குன்றம் பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகர பஸ்களில்(தடம் எண் 57 எப், 157, 57)தினமும் அந்த பகுதியை சேர்ந்த வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, மாநில கல்லூரி மற்றும் தியாகராய கல்லூரி மாணவர்கள் சென்னை வந்து செல்கின்றனர்.கடந்த மாதம் 28-ந்தேதி இந்த கல்லூரி மாணவர்கள் சிலர் செங்குன்றம் வரை செல்லும் மாநகர பஸ்சில்(தடம் எண் 57) பயணம் செய்தனர். வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பஸ் செல்லும் போது திடீரென சில மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

மேலும் சில மாணவர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பட்டாக்கத்தியை சாலையில் உரசியபடி வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் "அம்பேத்கர் கல்லூரிக்கு ஜெ" என கோஷமிட்டனர்.

மாநகர பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ரகளை செய்த இந்த காட்சிகளை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது.

இது குறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாளையத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் மற்றும் வடமதுரை மேடு பகுதியை சேர்ந்த சாரதி (வயது 19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story