ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் சேர வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் சேர வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்லூரி விடுதிகள்
திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் கல்லூரி மாணவர்களுக்காக 4 விடுதிகளும், மாணவிகளுக்காக 3 விடுதிகளும் என மொத்தம் 7 கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகிறது. 2023-2024-ம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி படிப்பதற்கு இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https/tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளரின் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
முன்னுரிமை
பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் சேர இணையதளத்தில் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.