கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கல்லூரி மாணவி
நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவருடைய மகன் சியாஹு (வயது 22), உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் சியாஹுக்கு தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் கடந்த ஜூன் மாதம் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சியாஹு தனக்கு திருமணமானதை மறைத்து கல்லூரி மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது.
பாலியல் பலாத்காரம்
அதைத்தொடர்ந்து இருவரும் பேசி வந்ததாகவும், ஒருவர் புகைப்படத்தை மற்றவருக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவி வேறு ஒருவரை காதலிப்பதாக சியாஹு சந்தேகப்பட்டார்.
உடனே அவர் மாணவியை தொடர்பு கொண்டு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டினார். உடனே மாணவி சியாஹுவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சமரசம் பேச வருமாறு சியாஹு அழைத்தார். அதைத்தொடர்ந்து 21-8-2022 அன்று மாணவி, சியாஹுவை சந்தித்தார். அவர் கல்லூரி மாணவியை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
இது குறித்து கல்லூரி மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சியாஹுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.