தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலி


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர்

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 19). இவர் சீதபற்பநல்லூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வெள்ளாளன்குளம் விலக்கு அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதனால் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் அவர் மோதினார். இதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பரிதாப சாவு

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story