சரக்கு வேனில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு
சரக்கு வேனில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் இறந்தார்.
கேட்டரிங் சர்வீஸ்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 21). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் இவர் தனது நண்பர்களோடு சேர்ந்து விசேஷ வீடுகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் தனது நண்பர்களுடன் சரக்கு வேனில் கேட்டரிங் சர்வீஸ் செய்வதற்காக கொத்தமங்கலம் சென்றுள்ளார்.
மாணவர் சாவு
சரக்கு வேன் பின்னால் அமர்ந்து அவர்கள் சென்று கொண்டிருந்தனர். ராயவரம் அருகே வந்த போது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு வேன், ஜெல்சன் பயணம் செய்த சரக்கு வேன் மீது உரசியது. அப்போது ஜெல்சன் கை உடைந்து சரக்கு வேனில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெல்சன் உறவினர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.