கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

செங்கோட்டை:

ெசங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள் செல்வக்குமார். பால் வியாபாரி. இவருடைய மகள் அமுதா (வயது 21). இவர் குற்றாலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டில் அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை பெற்றோர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமுதா மனநலம் சரியில்லாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story